தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பல்வேறு நாடுகளுக்கான தூதர்கள் சந்திப்பு!

10 நாடுகளை சேர்ந்த இந்திய தூதர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினர். தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இந்திய தூதர்கள் 10 பேர் கொண்ட குழுவாக நேற்று சென்னை வந்திருந்தனர். அவர்கள் கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து, அரசு விவகாரங்கள் குறித்து பேசினர். பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து பேச தலைமை செயலகம் வந்தனர். சிங்கப்பூர் நாட்டின் இந்திய தூதர் பெரியசாமி குமரன், நைஜீரியா நாட்டின் இந்திய தூதர், பாலசுப்பிரமணியன், ஐஸ்லாந்து நாட்டின் இந்திய தூதர் ஷியாம், சூடான் நாட்டின் இந்திய தூதர் முபாரக், கியூபா நாட்டின் இந்திய தூதர் ஜானகிராமன் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

மேலும் பப்புவா நியூகினியா நாட்டின் இந்திய தூதர் இன்பசேகர், பிஜி நாட்டின் இந்திய தூதர் கார்த்திகேயன், மலாவி நாட்டின் இந்திய தூதர் கோபாலகிருஷ்ணன், சுரிநாம் நாட்டின் இந்திய தூதர் பாலசந்திரன், ஜைபூதி நாட்டின் இந்திய தூதர் சந்திரமவுலி ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேற்று பேசினர். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொதுத்துறைச் செயலாளர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.