கனடா நாட்டில் கைத் துப்பாக்கி விற்பனையை உடனடியாக முடக்க அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டு உள்ளார்.
கனடா நாட்டில் கைத் துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மக்கள் கொல்லப்படும் போது, மக்கள் பாதிக்கப்படும் போது, பொறுப்பான தலைமை நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். துப்பாக்கிகள் சம்பந்தமாக மீண்டும் பல கொடூரமான சம்பவங்களை உதாரணங்களாக நாங்கள் பார்த்திருக்கிறோம். மக்கள் இனி கனடாவிற்குள் கைத் துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. மேலும் அவர்கள் புதிதாக வாங்கிய கைத் துப்பாக்கிகளை நாட்டுக்குள் கொண்டு வர முடியாது” என்று கூறினார்.
இதனிடையே துப்பாக்கிகள் மீது கடுமையான சட்டங்களை வைப்பது, துப்பாக்கி வன்முறையை குறைக்காது என்று துப்பாக்கி உரிமைகளுக்கான கனடா கூட்டணி குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.