புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது. இந்நிலையில் புளு டிக் கணக்குகளுக்கு கட்டணத்தை உயர்த்த எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்துக்குள் சென்ற எலான் மஸ்க் ஊழியர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை பணி நீக்கம் செய்தார். மேலும் அவர் ஆள் குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கினார்கள். பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்கவும், 3 ஆண்டுகளில் வருவாயை இரட்டைப்பாக்கவும் முயற்சி எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமான மற்றும் அதிக செயல்பாட்டில் இருந்த கணக்குகளுக்கு புளு டிக் வழங்கி வந்தது. 2017-ம் ஆண்டு இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் புளு டிக் வழங்கப்பட்டு வருகிறது. டுவிட்டர் கணக்குகளை சரிபார்ப்பதற்காக ஒரு புதிய செயலியை உருவாக்கி உள்ளது. புளு டிக் வேண்டும் என்று விரும்புபவர்கள் அந்த செயலி மூலம் விண்ணப்பித்து தனது முழு விவரங்களையும் தெரிவித்து சில ஆவணங்களை சமப்பிக்க வேண்டும். அது உண்மையான கணக்குதானா என்பதை டுவிட்டர் நிறுவனம் சரிபார்த்து புளு டிக் வழங்கும். டுவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது. இந்த நிலையில் புளு டிக் கணக்குகளுக்கு மாத கட்டணத்தை ரூ.1600ஆக உயர்த்த எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். விரைவில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.