மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவிடத்தை புனரமைக்க அண்ணாமலை கோரிக்கை!

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளையொட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். முதல்வரி்ன் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு
@BJP4TamilNadu சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அகில உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோவில் கண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் உடையாளூரில் உள்ளது. பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் இருக்கும் மாமன்னரின் நினைவிடத்தை தமிழக அரசு புனரமைத்து அவ்விடத்தில் ஒரு மாபெரும் நினைவிடம் அமைத்திட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை @CMOTamilnadu செயல்படுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.