அமைச்சர்களின் வாய் கோளாறால் தான் அரசு தவிப்பு: அண்ணாமலை

அமைச்சர்களின் வாய் கோளாறால் தான், அரசு தவிக்கிறது; பொய் சொல்லாமல் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பாலுக்கு ஜி.எஸ்.டி., வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான், திறனற்ற தி.மு.க., ஆட்சியின் பால்வளத் துறை அமைச்சர். இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறால் தான், தமிழக அரசு நிர்வாக கோளாறால் சிக்கி தவிக்கிறது. பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல், பால் விலை உயர்வை, திறனற்ற தி.மு.க., அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், தாய் அட்டை மற்றும் ‘ஆதார்’ அட்டை இல்லாத காரணத்தால், கர்நாடகா அரசு மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி கஸ்துாரி மற்றும் அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும், கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. அவர்களை உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.