மருத்துவ கல்லூரியில் மாணவர்களை டவுசருடன் ஓட வைத்து ராக்கிங்!

வேலூர் பாகாயத்தில் சிஎம்சி தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர செய்தனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

வேலூர் பாகாயத்தில் சிஎம்சி தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். ராக்கிங் கொடுமைகள் அனைத்தும் வீடியோவில் பரவி வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர செய்தனர். அவர்கள் ஓடி வரும்போது தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். அப்போது தண்டால் போட வைத்தும் குட்டிக்கரணம் அடிக்கவும் அவர்களை மிரட்டியுள்ளனர். அதனை கண்டு பயந்து போன முதலாம் ஆண்டு மாணவர்கள் குட்டிக்கரணம் போட்டனர். அவர்கள் கூறியபடி தண்டால் எடுத்தனர். மேலும் இரண்டு மாணவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சொன்னார்கள். அவர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். அப்போது அது சரியில்லை என்று கூறி மீண்டும் மீண்டும் முத்தம் கொடுக்க வைத்தனர். அந்த வீடியோ தற்போது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த கொடுமைகள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதலாம் ஆண்டு மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் உடல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை அந்த மாணவர்களே தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் இருக்கும் ராக்கிங் தடுப்புப் பிரிவுக்கும் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் ராக்கிங் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த தொடர்பாக சீனியர் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.