சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினமான ஜனவரி 23-ந்தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நேதாஜி பெயரில் நினைவரங்கத்தையும், அருங்காட்சியகத்தையும் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் நிறுவ உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு ‘தேசிய விடுமுறை அறிவிக்கும் விவகாரம் மத்திய அரசின் கொள்கை சார்ந்தது என்பதால், அதில் தலையிட முடியாது. அரசு அறிவிக்க வேண்டியது இது, பொதுநல மனுவை தவறாக பயன்படுத்த வேண்டாம். நேதாஜி இந்த நாட்டுக்கு உழைத்தது போல நீங்கள் உழைத்து அவர் பிறந்த நாளை கொண்டாடுங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளான ஜனவரி 23 ஆம் தேதியை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.