2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் ஆலோசனை!

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த அந்த கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முடிவு செய்தார். அதன்படி இன்று தனியார் ஓட்டலில் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றிய விவாதிக்கப்பட்டது. அதேபொல் கட்சி நிர்வாகிகளுக்காக பயிற்சி பட்டறையும் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கமல்ஹாசன் கூறுகையில், தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதித்தோம். அதேபோல் கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.