காங்கிரஸ் மேற்கொண்டுள்ள பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் மக்களாட்சியினை காக்கவும், கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து நாட்டினைப் பாதுகாக்கவும் நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இது குறித்து டுவிட்டர் பதிவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-
உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், மத்திய அரசு எரிபொருள்களின் விலையினை குறைக்கவில்லை. கச்சா எண்ணெய் 25 சதவிகிதம் மலிவு. எரிவாயு சிலிண்டர் விலை 40 சதவிகிதம் மலிவு. சர்வதேச சந்தையில் எரிபொருள்களின் விலை குறைவாக உள்ளதற்கான தரவு இதுவாகும். சர்வதே அளவில் எரிபொருள்களின் விலை குறைவாக இருக்கும்போது, மத்திய அரசு ஏன் எரிபொருள்களின் விலையினை குறைக்கவில்லை. பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் மத்திய அரசின் கொள்ளையடிக்கும் தந்திரத்துக்கு எதிராக மக்களாட்சியைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.