ஷேக் ஹசீனா பதவி விலக கோரி எதிர்க்கட்சியினர் பிரமாண்ட பேரணி!

வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம். எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

வங்காளதேசத்தின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷேக் ஹசீனா. இந்நிலையில், கோலாபாக் மைதானத்தில் எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசிய கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷேக் ஹசீனா வாக்குகளை திருடிவிட்டதாக குற்றம் சாட்டி கோஷமிட்டனர். மேலும் அவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர். பாராளுமன்றத்தை கலைத்து, நடுநிலையான காபந்து அரசாங்கம் அமைக்க சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை என எதிர்க்கட்சியின் தெரிவித்தனர். எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

முன்னதாக ஆளும் கட்சியினர் தேர்தல்களில் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, தேர்தலை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் இன்று நாடு முழுதும் மிகப்பெரும் போராட்டம், ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, பங்களாதேஷ் தேசியவாத கட்சியினர் ௨,௦௦௦ பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை எதிர்க்கட்சியின் பொதுச் செயலரான மிர்ஸா பக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் மற்றும் கட்சியின் நிலைக் குழு உறுப்பினர் மிர்ஸா அப்பாஸ் ஆகிய இரு முக்கிய தலைவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவர்கள் மீது உள்ள வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.