சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு விழுந்த மர்ம பொருள் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி மீது பல்வேறு விஷயங்களில் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளும் திமுகவிற்கு ஆளுநர் ஆர். என் ரவிக்கு இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவிக்குக்கும் – முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இரண்டு தரப்பும் பல்வேறு விஷயங்களில் கடுமையான மோதி வருகின்றன. சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு விழுந்த மர்ம பொருள் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திடீரென இரவு நேரத்தில் வந்து ஒரு பொருள் விழுந்துள்ளது. கார்டன் பகுதியில் பொத்தென்று பெரிய சத்தத்தோடு பொருள் விழுந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாவலர்கள் வேகமாக ஓடி வந்துள்ளனர். என்ன சத்தம் என்பதை பார்ப்பதற்காக வந்துள்ளனர். கார்டன் பகுதியில் விசித்திரமான ஒரு பொருள் கிடப்பதை இவர்கள் பார்த்துள்ளனர். அதன்பின் அந்த பொருளை எடுத்து சோதனை செய்துள்ளனர். எதுவும் ஆபத்தான பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்துள்ளனர். கடைசியில் அது வானிலையை காட்டும் பலூன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. காலை மாலை நேரங்களில் வானிலையை காட்டுவதற்காக அனுப்பப்படும் பலூன் ஆகும். ஆனாலும் ஆளுநர் மாளிகையில் இது விழுந்தது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தற்போது போலீசார் 5 தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.