மீண்டும் அதிகரிக்கும் கொரோனா குறித்து நாளை மத்திய அரசு ஆலோசனை மத்திய சுகாதாரத்துறை மந்திரி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதி உள்ளார். இந்தநிலையில், கொரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். பல நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பரிசோதனை ரத்த மாதிரிகளை மரபணு ஆய்வகங்களுக்கு தினமும் அனுப்ப வேண்டும் என்றும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.