எம்.ஜி.ஆர். காட்டிய பாதையில், அம்மாவின் வழி நடந்து, பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி கொள்வோம். தீய சக்தியால் பாதிக்கப்பட்ட, தமிழகத்தைக் காப்பாற்ற, சூளுரைப்போம், குளுரைப்போம் என புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட உறுதி மொழி விவரம் வருமாறு:-
ஏழை எளிய அடித்தட்டு மக்களை காக்கின்ற மகத்தான மக்கள் இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கத்தை நமக்குத் தந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழை எந்நாளும் காப்போம். தூய உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆரை நெஞ்சிலே தாங்கி, அவர் விட்டுச் சென்ற பணிகளை, லட்சியப் பாதையில் தடம் மாறாது பயணிப்போம். தடுமாறாமல் பயணிப்போம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் காக்க உறுதி ஏற்போம். எம்.ஜி.ஆர். காட்டிய பாதையில், அம்மாவின் வழி நடந்து, பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி கொள்வோம்.
நீட் தேர்வு விலக்கு எங்கே? கல்விக் கடன் ரத்து எங்கே? டீசல் விலை குறைப்பு எங்கே? கியாஸ் சிலிண்டர் மானியம் எங்கே? மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் எங்கே? பொங்கல் வருது பொங்கல் வருது, மக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 5 ஆயிரம் ரூபாய் எங்கே? மக்கள் கேள்விக்கு பதில் எங்கே? தீய சக்தியால் பாதிக்கப்பட்ட, தமிழகத்தைக் காப்பாற்ற, சூளுரைப்போம், குளுரைப்போம் என புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு உறுதிமொழி மேற்கொண்டனர்.