கொரோனா வைரஸை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்று வருகிறது. கொரோனா அறிகுறிகளோடு வரும் நபரை பரிசோதித்து அனுமதி அளிப்பது குறித்து ஒத்திகை பார்க்கப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியஅமைச்சர் மா.சுப்ரமணியன், கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராகி வருவதாக கூறினார். கொரோனா தொடர்பான கட்டமைப்பை இரண்டு நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 51 மட்டுமே உள்ளது என்று கூறினார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்று வருகிறது. கொரோனா அறிகுறிகளோடு வரும் நபரை பரிசோதித்து அனுமதி அளிப்பது குறித்து ஒத்திகை பார்க்கப்படுகிறது. சீனா, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. விமான நிலையங்களில் கடந்த 3 நாட்களில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பதிவாகவில்லை. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 10 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
பிஎப்-7 வகை தொற்று பரவுவதால், அதனை எதிர்கொள்ள நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் தயார்நிலை குறித்த ஒத்திகை நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் ஆக்சிஜன் இருப்பு, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரித்தால் அதை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது. மக்கள் சரியான சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதற்காக தான் இன்று கொரோனா மருத்துவமனைகளில் அவசர கால ஒத்திகை நடத்தப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.