மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னிற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வீடியோ மூலம் இரங்கற்பா பாடியுள்ளார்.
வயது முதிர்வின் காரணமாக பிரதமர் மோடி தாயார் ஹீரா பென் காலமானார். இன்று காலை இறுதிச் சடங்குகளை செய்தார் நரேந்திர மோடி. இந்நிலையில் வீடியோ மூலம் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டரில், அன்பான அன்னைக்கு அஞ்சலி என்ற தலைப்பில் இரங்கற்பா பாடியுள்ளார். அந்த வீடியோவில்,
மழலையாய் பிறந்த மகனை..
பிறர் மலைப்புற வளர்த்து..
உறுதியான மலையென பொதுவாழ்வில் உயரச் செய்து..
உலகிலேயே உயர்ந்த மனிதராய் உயர்த்தி..
தள்ளாத வயதிலும் தளர்வில்லாத வலிமையை..
உலகின் வலியத் தலைவராம் நம் பிரதமருக்கு..
பிறந்ததில் இருந்து அளித்து வந்த நம் அன்னை தீபம்..
அணைந்துவிட்ட அதிர்ச்சி..
எங்கள் பிரதமரின் அன்பு உள்ளம் மறைந்ததை கேட்டு..
எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்..
எதையும் தாங்கும் எப்போதும் உள்ள உறுதியை…
இப்போதும் நம் பிரதமருக்கு இறைவன் அருளட்டும்.. எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ஹீராபென் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு மிகவும் வருந்ததக்க நிகழ்வு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.