வட மாநில தொழிலாளர்களால் என் தாய் நிலத்தை இழப்பது வேதனையாக உள்ளது: சீமான்

எனக்கு என் வாழ்விடத்தை என் தாய்நிலத்தை இழக்கும் போது கஷ்டமாக இருக்கும். வட இந்திய தொழிலாளர்கள் இன்றைக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள். முதலாளிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இன்று 500 ரூபாய்க்கு வேலை செய்பவர்கள் நாளைக்கு 5 ஆயிரம் என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்களின் தேவை இங்கு அவசியப்பட்டு விடும். தவிர்க்க முடியாத இடத்தில் வந்து நின்று விடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நம்ம காலத்திலேயே தேர்தல் இப்படி நடக்குது.. நம்ம பிள்ளை குட்டி காலத்தில் தேர்தல் எப்படி நடக்கும்? நீங்கள் கொடுத்தால் மக்கள் வாங்கத்தான் செய்வார்கள். இலவசம் என்பதை மக்கள் எதிர்க்கவில்லை என்கிறார்கள். காசு கொடுக்காமல் தேர்தலை சந்தித்து பாருங்க பொதுத்தேர்தலில் எங்களுக்கு 31 லட்சம் பேர் வாக்களித்தனர். காசு வாங்கிக் கொண்டா ஓட்டு போட்டனர். நல்ல ஜனநாயகம் வர வேண்டும். நேர்மையான அரசியல் உருவாக வேண்டும் என்று விரும்பும் மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். நீங்கள் கொடுக்காமல் ஒருமுறை தேர்தலை சந்தித்து பாருங்களேன். தமிழ் தேசியத்தின் தேவை எப்போதுமே இருக்கிறது. இந்த அரசியல்தான் இருந்து இருக்க வேண்டும். இந்த அரசியல்தான் இனி வரும் காலங்களில் இருக்கும்.

நடிக்கிறது மட்டுமே இந்த நாட்டின் தலைவனாவதற்கு வழிநடத்துவதற்கான தகுதிகள் வந்து விடும் என்று சொல்வது இருக்குல்ல.. அது சரியாக இருக்காது. இங்க ஆகப்பெரும் தலைவர்கள் இருக்கிறார்கள். இப்பக்கூட நம்ம கூட வாழ்ந்து வரும் தலைவர்கள் இருக்கிறார்கள். நாட்டின் விடுதலைக்காகவே போராடிய முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு இருக்கிறார். மருத்துவர் ராமதாஸ் இருக்கிறார். 82 வயதிலும் தாய் மொழி தமிழைத்தேடி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த மாதிரி தலைவர்கள் எல்லாம் திரைப்பட புகழிலா வந்தார்கள். திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே இந்த நாட்டை ஆளுவதற்கும் வழிநடத்துவதற்கான தகுதி வந்து விடும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து வட இந்திய தொழிலாளர்கள் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய சீமான் கூறியதாவது:-

முதலாளிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அவர் (நிதிஷ் குமார்) மாநில மக்கள் இங்கே (தமிழ்நாடு) வந்து குடியேறுவது அவருக்கு பெருமையாக இருக்கும். எனக்கு என் வாழ்விடத்தை என் தாய்நிலத்தை இழக்கும் போது கஷ்டமாக இருக்கும். நான் இப்போது சொல்வது எல்லாம் உங்களுக்கு வேடிக்கையாக தெரியும். கொஞ்ச நாள் கழித்து பேசுவதற்கு நான் மட்டும் தான் இருப்பேன். நீங்கள் எல்லாம் இருக்க மாட்டீர்கள். இன்றைக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள். முதலாளிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதிக காசு கேட்கும்போது என்ன செய்வீர்கள். இன்று 500 ரூபாய்க்கு வேலை செய்பவர்கள் நாளைக்கு 5 ஆயிரம் என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்களின் தேவை இங்கு அவசியப்பட்டு விடும். தவிர்க்க முடியாத இடத்தில் வந்து நின்று விடுவார்கள். அவர்களின் உழைப்பு உங்களுக்கு தேவைப்படும். அப்போது அதிக காசு கேட்கும் போது என்ன செய்வீர்கள். அப்புறம் என்ன பண்ணுவீங்க. இவ்வாறு அவர் கூறினார்.