போபால் விஷவாயு வழக்கு: கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசு மனு தள்ளுபடி!

போபால் விஷவாயு வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ7,400 கோடி கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1984-ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு சொந்தமான பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயு விபத்தில் சுமார் 8,000 பேர் கொல்லப்பட்டனர். போபால் விஷவாயு பாதிப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகை உலுக்கிய போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் நீதிமன்றம் ரூ750 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு கூடுதலாக ரூ7,400 கோடி இழப்பீடு கோரி, சீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் மத்திய அரசின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.