பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு நாளை விசாரணை!

மற்ற மனுக்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் தேர்தலுக்கும், பொதுக்குழு தீர்மானங்களுக்கும் தடை கோரி, எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, நால்வரும், மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில், பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மட்டும், நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இன்றி, மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனுக்கள் இன்று(மார்ச் 30) விசாரணைக்கு வந்த போது, மற்ற மனுக்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.