தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்னையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-

உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.