இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்டைநாடான இலங்களை சிங்கள பெரும்பான்மை வாத அரசியல் நடைமுறையில் உள்ளது. பௌத்த மதம் அங்கு அரச மதமாக உள்ளதால் அந்நாட்டில் சிறுபான்மையினராக வசித்து வரும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தமிழ் இந்துக்கள் மீதான தாக்குதல் என்பது வரலாறு நெடுகிலும் இருந்து வருகிறது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, சிறுபான்மையினரை தாக்குவது, கலவரம் என வன்முறை வெறியாட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழர்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல் என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கான காரணத்தை சோழர்கள் காலத்தோடு ஒப்பிடுகின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். சோழர்கள் குறிப்பாக 7ம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற பிற்கால சோழர்கள் எப்போதும் இலங்கையை தாக்கி அங்கு புலிக்கொடியை இடைவிடாமல் பறக்க விட்டனர். சோழர்களோடு சேர்த்து பல தமிழர்களும் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்.
சோழர்களை தொடர்ந்து பாண்டியர்களும் இலங்கையை தாக்கி தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்துள்ளனர். இப்படியாக தமிழ் மன்னர்கள் பெளத்தர்களான சிங்களவர்களை தொடர்ந்து அடக்கி ஆண்டது, சிங்களவர்களிடம் தீராத கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கட்டியம் கூறுகின்றனர். அதனால் தமிழர்கள் மீதான தீராத வெறுப்பு ஏற்பட்டதாகவும் நிபுணர்கள் குறிப்பிட மறக்கவில்லை.
அதன் காரணமாகவே தமிழர் வெறுப்பு இலங்கை மன்னில் வேறூன்றி உள்ளது. ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின் தமிழர்கள் மீதான அதிகரித்தது. அடிப்படை உரிமைகள், அத்தியாவசிய தேவைகள் மறுக்கப்பட்டு வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. தமிழர்கள் மீதான் தொடர் தாக்குதல்களால் வெகுண்டெழுந்த பிரபாகரன், விடுதலை புலிகள் என்ற இயக்கத்தை தொடங்கி ராணுவ நடவடிக்கையை தொடர்ந்தார். கப்பல் படை, தரைப்படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட முப்படைகளையும் கொண்டு சிங்கள ராணுவத்திற்கு எதிராக சண்டை செய்தார். இலங்கை மண்ணில் மூன்று கட்டங்களாக போர் நடந்தது. இருதரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இந்தநிலையில் கடைசி யுத்தத்தில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்ததாக அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்தார். தலைவரே கொல்லப்பட்டதை அடுத்து விடுதலை புலிகளின் துருப்புகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தன. அப்படி சரணடைந்த பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக புகார் உள்ளது. விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இறுதி யுத்தத்தில் சிங்கள ராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், மனித உரிமை மிறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த சூழலில் இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களை குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என சுவிட்சர்லாந்து எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்தி சோசலிஸ்ட் கட்சி எம்பி ஃபாபியன் மொலினா மற்றும் தேசிய கவுன்சிலர் கிளாடியா ஃபிரடல் ஆகியோர், சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.