இதுக்கு தான் படிச்சவரு பிரதமராக வரணும்: அரவிந்த் கெஜ்ரிவால்!

2000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, “புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வ அவை செல்லும். செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது பிற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் ” என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போதைய நிலையில் செல்லும் எனவே பயப்படத் தேவையில்லை. எனினும் வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து 500 ரூபாய் அல்லது வேறு நோட்டுக்களை வாங்கி கொள்ளலாம். அதேநேரம் ரொக்க எக்ஸேன்ஞ் என்பது இப்போதைய நிலையில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை கொடுத்து ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நடைமுறைக்கு வருகிறது. ஒரு நாளைக்கு ஒருவரால் 20 ஆயிரம் ரூபாய் வரை தான் ரொக்கமாக எக்ஸேன்ஞ்ச் செய்ய முடியும். அதற்கு மேல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது. 2000 ரூபாய் நோட்டுக்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி உள்ளார். கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

ரூ.2000 நோட்டுக்ள் கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஓழியும் என்று முதலில் கூறினார். இப்போது 2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். அதனால் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பொதுமக்கள் அவதிப்படுவது அவருக்கு புரிவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.