தமிழகத்தில் கேலா இந்தியா போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கையை ஏற்ற பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கேலா இந்தியா போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கேலா இந்தியா 2023″ போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனது கோரிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த கேலே இந்தியா நிகழ்வு தளமாக அமையும். செஸ் ஒலிம்பியாட் போல் பிரம்மாண்டமாக கேலா இந்தியா விளையாட்டு போட்டிகள் பிரம்மாண்டமாகவும் தமிழக கலாசாரம் மற்றும் விருந்தோம்பலை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.