மூத்த அரசியல்வாதியான சரத் பவாருக்கு விடப்பட்ட கொலை மிரட்டல் மிகுந்த பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்று, மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் ஃப்ன்சல்கரிடம், சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தனர். அப்புகாரில், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடியவரான நரேந்திர தபோல்கர், 2013-ம் ஆகஸ்ட் 20ம்தேதி காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். நரேந்திர தபோல்கருக்கு ஏற்பட்ட அதே கதிதான் சரத் பவாருக்கும் ஏற்படும்”, என முகநூலில் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த பதிவுகளின் ஆதாரங்களையும் புகாருடன் இணைத்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி இதுபற்றி கருத்து கூறுகையில், “நாங்கள் இந்த புகாரை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். விசாரணையையும் தொடங்கி விட்டோம். இது சம்பந்தமாக தெற்கு பகுதி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவிருக்கிறோம்”, என தெரிவித்தார். மூத்த அரசியல்வாதியான ஷரத் பவாருக்கு விடப்பட்ட கொலை மிரட்டல் மிகுந்த பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.