10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு வரும் ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் மேற்கு வங்கத்தில் இருந்து தேர்வான 6 எம்.பிக்கள், குஜராத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 எம்.பிக்கள், கோவாவில் இருந்து தேர்வான ஒரு எம்.பி. என மொத்தம் 10 இடங்கள் ஜூலை, மாதங்களுக்குள் காலியாகவுள்ளன. இதையடுத்து, அந்த இடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 24-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் அன்றையே தினமே நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடங்களில் போட்டியிட விரும்புவோர் ஜூலை 13-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி ஜூலை 17 ஆகும்.
பதவிக்காலம் நிறைவடையவுள்ள 10 எம்.பி.க்களில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த டெரெக் ஓ பிரையன் (மேற்கு வங்கம்), வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (குஜராத்) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.