தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 22ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. 22ம் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை, ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தின. இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கட்சிகளுக்கான கூட்டணி பெயர் அறிவிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இதேபோல் தமிழகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை, செந்தில் பாலாஜியிடம் நடைபெற்று வரும் விசாரணை என அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.