டாஸ்மாக் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்வு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குவாட்டர், ஒயின், பீர் உள்ளிட்டவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு விற்பனைகள் நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கிடையே தான் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்தால் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே தான் இன்று அதிரடியாக டாஸ்மாக் நிர்வாகம் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலை குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு என்பது அனைத்து குவாட்டர், ஒயின், பீர் என அனைத்து வகையான மதுபானங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 வகையான வெளிநாடு மதுபானங்களின் விலைமை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதனால் குடிமகன்கள் ஷாக்காகி உள்ளனர்.