அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆன்லைன் ரம்மி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு என்பதை வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறுவார்கள்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் என்கிற முறையிலோ, திமுகவைச் சேர்ந்தவர் என்கிற முறையிலோ அவருக்கு கூடுதலாக எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. செந்தில்பாலாஜி வழக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், அவருக்கு ஏதாவது இடையூறு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தவறான தகவலை பரப்புவதன் மூலம் அவர் சிறையில் சொகுசு வாழ்கை வாழ்கிறார் என்ற மாயதோற்றத்தை உருவாக்கப் பார்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.