பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.
பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரில் இன்று முதல் ஆக.24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமா் மோடி இன்று காலை டெல்லியிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். இதனிடையே இன்று மாலை ஜோகன்னஸ்பெர்க் நகருக்குச் சென்றடைந்தார்.
இன்று தொடங்கவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில், இயற்கை சீற்றம், உலக பொருளாதாரம் மற்றும் உணவு பஞ்சம் தீர்ப்பதில் முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.