காவிரி விவகாரத்தில் உபரி நீரை தரமாறுக்கும் கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து ஆளுநர் மாளிகையை பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் கடந்த சனிக்கிமை அன்று தமிழக தமிழக வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. இந்த போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 870 பேர் மீது கிண்டி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ஆளுநர் கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடந்தது. சைதாப்பேட்டை முதல் கவர்னர் மாளிகை வரை நடந்த முற்றுகை பேரணியில் இந்த பேரணி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுசெயலாளர் சத்ரியன் வேணுகோபால் உள்பட அக்கட்சியன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வேல்முருகன், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட கார்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது என்றும் கர்நாடக அரசின் அனைத்து செயல்களுக்கும் மத்திய அரசு துணை நிற்கின்றது என்றும் தெரிவித்தார், மேலும் சனாதனத்தின் பெயரால் தமிழ் மக்களிடையே பிரிவினையை ஆளுநர் ஆர்என் ரவி ஏற்படுத்துவதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
ஆயிரக்கணக்கனோர் போராட்த்தில் பங்கேற்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற அனைவரையும் கிண்டி போலீஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இந்த சூழலில் கிண்டி ராஜ்பவனை நோக்கி பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட 870 பேர் மீது கிண்டி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.