2024-ம் ஆண்டு க்சபா தேர்தலில் மோடி மீண்டும் பிரதமரானால் நாடாளுமன்ற தேர்தல் இனி இல்லை.. அதிபர் ஆட்சிதான்.. பாகிஸ்தான் போல யாரை வேண்டுமானாலும் தூக்கிலிடுவார்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கூறியுள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-
அரசியல் சாசனத்தில் ஒருமைப்பாட்டை காப்பாற்றுவோம் என்பது உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் கபளீகரம் செய்யும் வேலையை, ஒழிய வேண்டும் என்கிற வேலையை இன்றைக்கு மோடியும் அமித்ஷாவும் மத்தியிலே அரசாங்கத்திலேயே செய்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இந்துக்களில் தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் படிக்கக் கூடாது. இப்படி வர்ணாசிர தர்மத்தைக் கொண்டு வருகிற ஆட்சி 9 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இந்த ஆட்சி இன்னொரு முறை வந்தால், அரசியல் சட்டம் இருக்காது. அதான் அவர்களது கோரிக்கை. ஜனநாயகம் இருக்காது. 2024 தேர்தலில் தப்பித் தவறி மோடி வந்துவிட்டால் அதற்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் இந்த நாட்டி இல்லை.. இல்லவே இல்லை. இதற்குப் பிறகு அதிபர் ஆட்சிதான் பாகிஸ்தான் மாதிரி.. யாரை வேண்டுமானாலும் தூக்கில் போடலாம். ஒரே மொழிதான் இருக்கும். இந்திதான் பேசனும். சமஸ்கிருதம்தான் பேசனும்.
இந்தியாவின் ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சந்திரயானை அனுப்பிவிட்டு சொல்கிறார், சமஸ்கிருதத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது. விண்வெளிக் கலனை உருவாக்க சமஸ்கிருதத்தில் ஏற்கனவே புஷ்ப வாகனம் இருந்தது. புஷ்ப வாகனம் என ஒன்னு இருந்துச்சாம். அதைத்தான் இப்ப கண்டுபிடிச்சிருக்காங்களாம். பிளாஸ்டிக் சர்ஜரி இருந்துச்சாம்.. அதனால்தான் விநாயகர் வந்தாராம். எப்ப, 5000 வருஷத்துக்கு முன்னால பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததாம். இதெல்லாம் இவனுக விடுகிற புரூடா. ஆனால் நான் சொன்னேன்.. எங்கள் தமிழ் மொழி அறிவியல் மொழி; நியாயத்தை சொன்ன மொழி; பொய் சொல்லாதே – திருடாதே- நல்லவனா இருன்னு சொன்ன ஒரே மொழி தமிழ் மொழி என்றேன். இன்று நடைபெறுவது திராவிடத்துக்கும் ஆரியத்துக்குமான போர். இன்று நடைபெறுவது சமத்துவத்துக்கும் எதேச்சதிகாரத்துக்குமான போர். இன்றைக்கு நடக்கின்றன போர் நம்முடைய கலாசாரம், மொழியை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என கொக்கரிக்கக் கூடிய டெல்லி வல்லாதிக்கத்தை எதிர்க்கின்ற போர்.
இந்தப் போரில் முன்னிலை வகிக்க கூடிய ஒரே தகுதி வாய்ந்த தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்த அளவுக்கு மோடியை, அமித்ஷாவை நேருக்கு நேராக எதிர்க்கின்ற துணிச்சல் உள்ள ஒரு தலைவன் இங்கே இல்லை. எங்ககிட்ட பாஜககாரன் கேட்கிறான், நாங்கதான் உங்க கிட்ட வம்புக்கே வரலையே என. வம்பு என்பது பாஜகவுடன் மோடியுடன் அமித்ஷாவுடன் அல்ல. மோடியும் அமித்ஷாவும் கொண்டு வருகிற தத்துவம்தான் எங்களுக்கான பிரச்சனை. தமிழ்நாட்டுக்கு எதிரான தத்துவம்; திராவிடத்துக்கு எதிரான தத்துவம்; பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு எதிரான தத்துவம்; ஆகையால் ஸ்டாலின் எதிர்க்கிறார் என்றேன். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.