காவிரியிலிருந்து அக்.16 முதல் 31 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. காவிரியிலிருந்து அக்.16 முதல் 31 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை வைத்துள்ளது. நீர் பற்றாக்குறையால் தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்த நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை வைத்துள்ளது.
காவிரியில் இருந்து 16,000 கன அடி வீதம் நீர் திறக்க தமிழகம் கோரிக்கை விடுத்த நிலையில், தண்ணீர் திறக்க முடியாத சூழல் குறித்து கர்நாடக அரசு விளக்கம் தெரிவித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.