ஆளுநரிடம் பெட்ரோல் குண்டு பற்றி விசாரிக்கனும்: வன்னியரசு

கிண்டி ராஜ்பவன் வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்து உள்ளார்.

சென்னை கிண்டியில் அமைந்து உள்ள தமிழ்நாடு அளுநர் மாளிகை வெளியே நேற்று கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்து போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளதாவது:-

சட்டம் – ஒழுங்கை மதிக்காமல் பொது அமைதியை சீர்குலைத்து வரும் சமூக விரோதியை எப்படி ரவுடி என அழைக்கிறோமோ, அதே போல தான் அரசியலமைப்புச்சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வரும் ஆளுனர் போன்றோரை ரவுடி என அழைப்பதா? தேச விரோதி என அழைப்பதா? என்பதை ஆளுனர் மாளிகையே முடிவு செய்ய வேண்டும். இச்சூழலில், கருக்கா வினோத் எனும் ரவுடி ஆளுனர் மாளிகை மீது வெடிகுண்டு வீசியதாக காவல்துறை கைது செய்துள்ளது. இதே ரவுடி கடந்த 2022 பிப்ரவரி 10 அன்று பாஜக தலைமை அலுவலக வாசலில் வெடிகுண்டு வீசியதாக கைது செய்யப்பட்டான். இப்போது ஆளுனர் மாளிகை மீது வீசியதாக கைது செய்யப்பட்டுள்ளான்.

சமீப காலமாக,பாஜகவினரும் ஆளுனரும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில்,செயல்பட்டுவருவதை கவனிக்கலாம். அதன் தொடர்ச்சியாக சட்டம் – ஒழுங்கு சரியில்லை என உறுதி செய்வதற்காக இம்மாதிரியான ரவுடிகளை பயன்படுத்துகிறார்களோ எனும் அய்யம் பொது மக்களிடையே எழுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டை குறிப்பாக சென்னையை பாதுகாப்பான நகரமாக ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியை கலைக்க அச்சுறுத்துகிறார்களா எனும் சந்தேகமும் எழுகிறது. ஆகவே, தமிழ்நாடு காவல்துறை இந்த கோணத்திலும் விசாரணையை மேற்கோள்ள வேண்டும். இந்த வெடிகுண்டு வழக்கில் ஆளுனராக பணி செய்ய வந்துள்ள திரு.ஆர்.என்.ரவியையும் விசாரணை செய்தால் தான் விசாரணை முழுமை பெறும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள மற்றொரு பதிவில், “1995 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் வீட்டுச்சுவர் அருகே வெடிகுண்டு வெடித்தது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக இயக்குனர் மணிரத்னம் அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. வெடிகுண்டு வீசிய சமூக விரோதிகளுக்கும் மணிரத்தினத்துக்கும் என்ன தொடர்பு? என்ன தனிப்பட்ட..” என்று குறிப்பிட்டு உள்ளார்.