சமஸ்கிருதம்தான் நமது முன்னேற்றத்தின் மொழி: பிரதமர் மோடி!

சமஸ்கிருதம் பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல நமது “முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின்” மொழியாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் உள்ள துளசி பீடத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சமஸ்கிருதம் பல மொழிகளின் தாய். சமஸ்கிருதம் நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின் மொழி” என்றார். தொடர்ந்து பேசிய அவர், சமஸ்கிருதம் காலப்போக்கில் சுத்திகரிக்கப்பட்டது, ஆனால் அது மாசுபடவில்லை . நமது கலாச்சாரம் இன்னும் மாறாமல் மற்றும் உறுதியாக உள்ளது என கூறினார்.

இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் உலகில் எத்தனை மொழிகள் வந்து மறைந்துள்ளன? பழைய மொழிகளுக்குப் பதிலாக புதிய மொழிகள் வந்துள்ளன. ஆனால் நமது கலாச்சாரம் இன்னும் அப்படியே உள்ளது. சமஸ்கிருதம் காலப்போக்கில் செம்மையடைந்தது ஆனால் மாசுபடவில்லை என்றார்.

அஷ்டத்யாயி என்பது இந்தியாவின் மொழியியல், இந்தியாவின் அறிவுத்திறன் மற்றும் நமது ஆராய்ச்சி கலாச்சாரத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான உரை என்று பிரதமர் மோடி கூறினார்.

“ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தில் இந்தியாவை அழிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமஸ்கிருத மொழியை முற்றிலுமாக அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரம் பெற்றோம், ஆனால் அடிமை மனப்பான்மை கொண்டவர்கள் சமஸ்கிருதத்தைப் பற்றி ஒரு பக்கச்சார்பான கருத்தைக் கொண்டிருந்தனர். மக்கள் தங்கள் தாய்மொழியை அறிந்தால், மற்ற நாடுகள் அதைப் பாராட்டுவார்கள், ஆனால் அவர்கள் சமஸ்கிருத மொழியைப் பின்தங்கியதன் அடையாளமாகக் கருதுகிறார்கள் என்றார்.
இவ்வாறான மனநிலை கொண்டவர்கள் கடந்த ஆயிரம் வருடங்களாக வெற்றியடையவில்லை என்றும் எதிர்காலத்தில் வெற்றியடைய மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ துளசி பீத் சேவா நியாஸ் என்பது மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூடில் உள்ள ஜான்கி குந்த் என்ற இடத்தில் உள்ள ஒரு மத மற்றும் சமூக சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1987 துளசி ஜெயந்தி நாளில் குருஜியால் நிறுவப்பட்டது. துளசி பீடம் இந்தியாவிலும் உலகிலும் இந்து மதக் கருப்பொருள்கள் பற்றிய இலக்கியங்களை வெளியிடும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.