நாங்கள், என்ன வீடு விடாக போய் குடியுங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமா.. வேண்டாம் என்றுதான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மது விற்பனையை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் நாங்கள் எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தீபாவளி நேரத்தில் பிரச்சினை ஏற்படாமல் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. டாஸ்மாக் சார்பில் அங்கு கடைக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் பேரிகார்டு எல்லாம் ரெடி பண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக எதையும் செய்து அவர்களை ஊக்கப்படுத்த அல்ல.
90 எம்.எல் மது பாட்டில்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக சொன்னதாக கேட்கிறீர்கள்.. நியாபகடுத்தி இருக்கிறீர்கள். பேசிக்கொண்டு இருக்கிறோம். ஏற்பாடு செய்கிறோம். டெட்ரோ பாக்கெட்டுகளை உடனடியாக அமல்படுத்த முடியவில்லை. சில தயாரிப்பு வேலைகள் தேவைப்படுகிறது. மது குடிப்பவர்களை ஊக்குவிப்பதற்காக வியாபாரத்தை அதிகப்படுத்துவதற்காக என்று சொல்கிறார்கள். அப்படி இல்லை. பாட்டில் போட்டு உடைத்து விடுகிறார்கள் பெரிய கஷ்டமாக உள்ளது. நீங்க சொல்றீங்க.. சாக்கடை எல்லாம் சரி இல்லை என்று.. அதில் போட்டு உடைத்து விடுகிறார்கள். எனவே அதையெல்லாம் பாதுகாப்பு ஏற்படுத்துவதற்காக இது கூடுதல் நடவடிக்கையே தவிர.. வேறு நோக்கம் எதுவும் இல்லை. எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்றார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுகுடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாக அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-
அண்ணாமலை பேசியதை நான் இன்னும் பார்க்கவில்லை. அண்ணாமலை இப்படி சொல்லியிருந்தால் நாங்கள், என்ன வீடு வீடாக போய் குடியுங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமா.. வேண்டாம் என்றுதான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். வேண்டாம் என்று தான் விளம்பர படுத்திக்கொண்டு இருக்கிறோம். டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை எடுத்த உடனே எல்லாவற்றையும் மூடி விட முடியாது. அரசாங்கத்திற்கு உடன்பாடு இல்லை என்றாலும் சில சூழ்நிலையின் காரணமாக இதை எல்லாம் நங்கள் அனுமதிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அவர்கள்(பாஜக) ஆட்சி செய்யும் மாநிலத்தில் இல்லையா.. அண்ணமாலை சொல்வதற்காக பதில் சொல்வதில் அர்த்தம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.