தெலுங்கனாவில் தங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. 3 மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
இதனிடையே, தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-
தெலுங்கானாவில் தங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். சித்தாந்தத்திற்கு இடையேயான போர் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.