அதி வேகத்தில் சூறாவளிக் காற்று வீசி வருவதாக தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்து உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மீன்வளத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தூத்துக்குடி கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. அதேபோன்று தூத்துக்குடி கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. எனவே இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.” என தெரிவித்து உள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையில், “தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் நாளை கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 18.12.2023: கேரள கடலோரப்பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்” என்று குறிப்பிட்டு உள்ளது.