விஜயகாந்த் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்!

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். இதையடுத்து விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த பொதுத் தலைவரும், தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் இன்று சென்னையில் காலமானார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.