முழு கொள்ளவை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர் மழையால் தேனி ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை நிரம்பியுள்ளது. உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் மிகப் பெரியளவில் மழை பெய்தது. கடந்த மாதம் தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கனமழை கொட்டியது. தமிழ்நாடு அரசின் அடுத்த அதிரடி.. ரூ.28 கோடிக்கு காசநோய் கண்டறியும் கருவிகள்.. ஐஓசி-யின் அசத்தல் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் உள்ள நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பியது. இது விவசாயிகள் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே தேனி, திண்டுக்கல் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்படி தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. அணைக்கு இப்போது நீர் வரத்து வினாடிக்கு 3100 கன அடியாக உள்ள நிலையில், அது அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையில் உள்ள பெரிய பிரதான 7 மதகுகள் மூலம் 3100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை கரை பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சைரன் மூலம் ஒலி எழுப்பியும் எச்சரிக்கை விடுத்தும் கரையேறும் இருக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருகிறது.