இரண்டாவது முறையாக பிரதமா் தமிழகம் வருகிறாா். இது தமிழகத்தின் மீது அவா் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது என அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை முக்கியத் தலைவா்கள் ஒன்றாக சந்தித்துப் பேசுவோம். அதுபோலத்தான் கோவையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பிரதமா் தமிழகம் வருகிறாா். இது தமிழகத்தின் மீது அவா் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது.
அயோத்தி ராமா் கோயில் குறித்து பேசுவதற்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. கவர்னர் தமிழ்நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். கவர்னர் வரம்பு மீறியதாக சுப்ரீம் கோர்ட்டு சொல்லவில்லை. முதலில் கவர்னர் மீது முதல்-அமைச்சர் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, கண்ணாடியை பார்த்து ஆட்சி எப்படி நடத்துவது என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
எனக்கு முதல்-அமைச்சர் ஆசை இல்லை. என்னை பொறுத்தவரை பல தலைவர்களை உருவாக்குவது. பதவி ஆசை பிடித்த சில கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். என்னைவிட திறமையான தகுதியான பல தலைவர்கள் பாஜகவில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.