மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பர்த்வானில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை வழியாக சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். காயமடைந்த அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.