காங்கிரஸுக்கு ஒரு இடத்தையும் கொடுக்க மாட்டேன்: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களை மட்டுமே தருவேன். அவர்கள் சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என்று காங்கிரஸுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனை விடுத்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது திரிணமூல் கட்சி, காங்கிரஸுக்கு 2 இடங்கள் ஒதுக்கயிருந்ததாகவும், அதை அவர்கள் ஏற்க மறுத்ததாகவும், இப்போது அவர்களுக்கு “ஒரு இடத்தையும் கொடுக்க மாட்டேன்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

“கடந்த காலங்களில் சிபிஎம் கட்சியினர் என்னை பலமுறை உடல் ரீதியாக தாக்கியுள்ளனர். கொடூரமான முறையில் நான் தாக்கப்பட்டுள்ளேன். என்னுடைய நலன் விரும்பிகளால் நான் இப்போது உயிருடன் இருக்கிறேன். இடது சாரிகளை என்னால் மன்னிக்க முடியாது. அதுவும் சிபிஎம்-ஐ என்னால் மன்னிக்கவே முடியாது. எனவே இன்று சிபிஎம் உடன் இருப்பவர்கள், பாஜகவிலும் இருக்கலாம். அவர்களை நான் மன்னிக்க மாட்டேன்” என்று மம்தா தெரிவித்தார்.

“சட்டப்பேரவையில் உங்களுக்கு ஒரு உறுப்பினர்கூட இல்லை. நாங்கள் உங்களுக்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைத் தருகிறோம் என்று காங்கிரஸிடம் கூறினேன். ஆனால் அவர்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதனால் நான் உங்களுக்கு ஒரு தொகுதிகூட தரமாட்டேன் என்று தெரிவித்தேன். மேலும், நீங்கள் சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.