புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் ஒரு திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில், (TMC) புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க மிககுறைந்த விலையில் மருந்தினை கண்டறிந்துள்ளது. தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு லட்சங்கள், கோடிகள் செலவழிக்கப்படும் நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்கான மாத்திரை வெறும் 100 ரூபாய்க்கு கிடைக்கும் என மருந்தினை கண்டுபிடித்த டாடா மெமோரியல் சென்டர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய்களுக்கு இன்றைய தேதியில் சென்னை போன்ற பெருநகரங்களில் கோடிகளை அல்லது லட்சங்களை கொட்டி செலவு செய்தால் ஓரளவு தீர்வினை பெற முடியும்.. அதுவும் 100 சதவீதம் தீர்வினை பெற முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.. அதேநேரம் அறிவியல் ஆராய்ச்சிகளில் மிகப்பெரிய அசுர வளர்ச்சி ஏற்பட்டு வருவதால் மருத்துவதுறையில் மிகப்பெரிய புரட்சிகள் நடந்து வருகிறது. பல கடிமான நோய்களுக்கு மருந்தே இல்லை என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாக தகர்க்கப்பட்டு வருகிறது. பல லட்சம் என்று விற்கப்பட்ட மருந்துகள் மற்றும் சிகிச்சைகளின் செலவுகள் குறைந்து வருகிறது. சாமானியருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை முதல் குடல் மாற்று அறுவை சிகிச்சை வரை கிடைக்க தொடங்கி உள்ளது. உலகத்தில் பல்வேறு வகையான மருத்துவ கண்டுபிடிப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெறும் 100 ரூபாயில் புற்றுநோயை கொல்லும் மருந்தினை இந்திய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் ஒரு திருப்புமுனை என்று இந்திய மருத்துவ துறையையே இந்த கண்டுபிடிப்பை புகழ்ந்து வருகிறது.
டாடா மெமோரியல் சென்டர் (TMC) புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க மிககுறைந்த விலையிலான மருந்தினை கண்டுபிடித்திருக்கிறது. ஐஏஎஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர் பொதுவாக புற்றுநோய் வந்தவர்களுக்கு கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை அளித்து புற்றுநோய் குணமாக்கப்படுகிறது. இதில் இறக்கும் புற்றுநோய் செல்கள் உயிரணு இல்லாத குரோமாடின் துகள்களை வெளியிடுகின்றன. அப்படி வெளியிடப்படும் துகள்கள் காரணமாக நம்முடைய உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றும் அபாயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சைக்கு பின்னர், இறந்த புற்றுநோய் செல்கள் மூலம் வெளியிடப்படும் செல்-இலவச குரோமாடின் துகள்கள் உடலின் மற்ற செல்களுக்கு பரவாமல் தடுத்து அவற்றை செயலிழக்கச் செய்யும் மற்றும் அழிக்கும். மருந்துகள் எடுத்துக் கொண்டால் மட்டுமே புற்றுநோய் மீண்டும் வராது என்ற நிலை இருக்கிறது. இதை பல்வேறு மருத்துவ ஆய்வுகளுமே பரிந்துரைக்கிறது. மருத்துவ ஆய்வின்படி, இறக்கும் புற்றுநோய் செல்கள் உயிரணு இல்லாத குரோமாடின் துகள்களை (cfChPs அல்லது குரோமோசோம்களின் துண்டுகள்) நம் உடலுக்குள் வெளியிடுகின்றன. இது ஆரோக்கியமான செல்களை புற்றுநோயாக மாற்றும் அபாயம் உள்ளது. ரத்த ஓட்டத்தின் மூலம் ஆரோக்கியமான குரோமோசோம்களுடன் இணைந்து புதிய புற்று நோய் கட்டிகளை ஏற்படுத்தலாம்.
குரோமாடின் துகள்கள் ஆரோக்கியமான குரோமோசோம்களுடன் இணைந்து புதிய கட்டிகளை ஏற்படுத்தலாம். செல்-இலவச குரோமாடின் துகள்கள் என்பது நமது உடலில் உள்ள டிஎன்ஏ மற்றும் புரோட்டீன்களின் சிக்கலான குரோமடினின் துண்டுகளை குறிப்பதாகும். அவை தான் குரோமோசோம்களை உருவாக்குகின்றன. அவை இரத்தம் அல்லது சிறுநீர் போன்ற உடல் திரவங்களில் செல்களுக்கு வெளியே நமது உடலில் காணப்படுகின்றன. இறந்த புற்றுநோய் செல்கள் குரோமாடின் துகள்களாகி சிறிய துண்டுகளாக உடைந்து, ரத்த ஓட்டத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்குச் சென்று ஆரோக்கியமான செல்களுக்குள் இணைந்து புதிய கட்டிகளை ஏற்படுத்தலாம். இந்த பிரச்னைக்கு தீர்வு காண டாடா மெமோரியல் சென்டர் கண்டுபிடித்த ரெஸ்வெராட்ரோல் மற்றும் காப்பர் (R+Cu) கொண்ட புரோ-ஆக்ஸிடன்ட் மாத்திரைகளை பயன்படுத்த முடியும்.
“டாடா டாக்டர்கள் இந்த மாத்திரியை கண்டுபிடிக்க ஏறக்குறைய பத்தாண்டுகளாக பணியாற்றி உள்ளார்கள். இந்த மாத்திரைக்கு அனுமதி கேட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஒப்புதலுக்காக TIFR விஞ்ஞானிகள் அனுப்பி உள்ளார்கள் . ஒப்புதல் கிடைத்த பிறகு, அது ஜூன்-ஜூலை முதல் சந்தையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த இந்த உதவும் என்று மூத்த புற்றுநோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து புற்றுநோய் சிகிச்சை சிகிச்சையின் பக்க விளைவுகளை சுமார் 50 சதவீதம் குறைக்கும் என்றும் இரண்டாவது முறை புற்றுநோயைத் தடுப்பதில் 30 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.