லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து சேலம் அக்ஹாரம் மார்கெட் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
இந்தாண்டு தமிழ்நாடு முழுக்க மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் எப்போதும் இரண்டாம் கட்டத்தில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இந்த முறை முதல்கட்டத்திலேயே லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கே தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. தமிழ்நாட்டில் இந்த முறை திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக தான் முதல் கட்சியாகக் கூட்டணியை இறுதி செய்தது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே திமுக தனது கூட்டணியை உறுதி செய்துவிட்டது. அதன் பிறகு தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என அனைத்தையும் முடித்து பிரச்சாரத்தையும் திமுக வேகமாகத் தொடங்கியது. கடந்த முறையைப் போலவே இந்த முறைு திமுக கூட்டணியில் திமுகவைப் பொறுத்த அளவில் 21 தொகுதிகளில் நேரடியாகக் களமிறங்கியுள்ளது.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் அவர் தருமபுரியில் திமுக வேட்பாளர் மணிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார். அங்கே அவர் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்துப் பேசினார்.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சேலம் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். இன்று காலை நடைப்பயிற்சியை முடித்த அவர் பிறகு சேலம் அக்ரஹாரம் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். சேலத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நடந்து சேன்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கே இருந்த பொதுமக்கள் பலரும் முதல்வருடன் ஆர்வமாகச் செல்வி எடுத்துக் கொண்டனர். இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பெரியநாக்கன்பாளையம் பகுதியில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.