திருச்சியில் பிரச்சாரம் கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். “ஐபிஎஸ் படிச்சு எழுதி பாஸ் பண்ணியா.. இல்லைனா பாத்து எழுதுனியா” என்றும் அண்ணாமலையை பார்த்து சீமான் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், பிரச்சாரங்கள் அனலை கக்கி வருகின்றன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் சீமான். அந்த வகையில், திருச்சி தொகுதி வேட்பாளர் ராஜேஷை ஆதரித்து நேற்று சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அண்ணாமலை.. ஏதோ தமிழ்நாட்டுல ஆடிட்டு இருக்க. அதிகாரத் திமிருல ஆடுற. நீ உண்மையிலேயே வீரனாக இருந்தால், என் கருத்துக்கு எதிர் கருத்து கூறி மோதிப் பாரு. தைரியம் இருந்தால் ஒரு பொது தொலைக்காட்சிக்கு வா. நானும் வர்றேன். என்கிட்ட நீ ஆயிரம் கேள்வி கேளு. நான் பதில் சொல்றேன். பதிலுக்கு ஒரே ஒரு கேள்விதான் நான் உன்ட்ட கேட்பேன். தமிழ்நாட்டிற்கு பாஜக எதுக்கு வேணும்னு நீ பதில் சொல்லிரு. நான் அரசியலை விட்டே விலகிடுறேன்.
உன் உடம்புல தூய தமிழ் ரத்தம் ஓடுதா.. போய் சோதிச்சிட்டு வா. தமிழ்நாடு நோடில்லா.. காவிரி நோடில்லானு பேசுனியே.. தமிழ்நாட்டுல உனக்கு ஓட்டில்லானு மக்கள் சொல்லப் போறான்.. பாத்துக்குட்டே இரு. இன்னும் இந்தி திணிப்பு, சமஸ்கிருதம் திணிப்பு என்று இன்னும் பழைய செருப்பையே சீமான் தூக்கிட்டு வர்றாரே என அண்ணாமலை சொல்லி இருக்காரு. நான் ஏன் தூக்கிட்டு திரியுறேனு தெரியுமா? உங்களை மாதிரி ஆளுங்க திரும்பவும் இந்தி, சமஸ்கிருதம்னு பேசிட்டு வந்தா அந்த பழைய பிஞ்ச செருப்பாலையே அடிக்கதான் நான் தூக்கிட்டு வர்றேன். சேட்டை பண்ணிட்டு திரியுற நீ.. தமிழ்னா என்னனு தெரியுமா உனக்கு. தமிழன்னா யாருனு தெரியுமா உனக்கு. என் மொழி வரலாறு இன வரலாறு தெரியுமா உனக்கு. முதல்ல போய் படி. நீ ஐபிஎஸ் படிச்சு எழுதுனியா.. பாத்து எழுதுனியா? என்ன விளையாட்டு காட்டிட்டு திரியுற நீ. பாத்து இருந்துக்கோ. இவ்வாறு சீமான் பேசினார்.