கோவையில் திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு!

கோவையில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை ஆவாரம்பாளையம் 28 ஆவது வார்டு பகுதியில் தேர்தல் விதிகளை மீறி இரவு 10.40 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்டதை எதிர்த்து திமுகவினர் வாக்கு வாதம் செய்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு வாகனங்களில் வந்த பாஜகவினர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இருதரப்பு மோதலில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணாமலை சொல்லித்தான் பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். பாஜகவினர் முழுக்க முழுக்க மதுபோதையில் இருந்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜகவைச் சேர்ந்த ஆனந்தகுமார், மாசானி உள்ளிட்டோர் மீது 294 பி,323, 147 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.