தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது: செல்லூர் ராஜு!

இந்தியளவில் போதைப்பொருள் பயன்பாட்டு தளமாக குஜராத்தும், தமிழக அளவில் தமிழ்நாடும் விளங்குகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரை புறவழிச்சாலை உள்ள போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் முன் அண்ணா தொழிற் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மே தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் லட்டு வழங்கி மே தின வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் அங்கே அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து அங்கிருந்து அனைவருக்கும் ரஸ்னா, நீர்மோர், தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:-

அரசு பேருந்துகளில் உதிரி பாகங்களை ஒட்டுனர்கள், நடத்துநர்கள் தங்களுடைய சொந்த செலவில் மாற்ற போக்குவரத்து கழக நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது. கடினமான பணிகளை அதிமுக தொழிற்சங்க ஓட்டுநர்களுக்கும், எளிமையான பணிகளை திமுக மற்றும் கூட்டணி கட்சியை தொழிற்சங்க ஓட்டுநர்களுக்கும் நிர்வாகம் வழங்குவது கண்டிக்கத்தக்கது. விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியல குருநாதா.. 39 டிகிரி வெயில்.. ஆனா 52 டிகிரி ஹீட் மாதிரி எரியுது! தவிக்கும் தலைநகர் சென்னை!

ஆளும் திமுக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. மழை வெள்ள பேரிடர் காலத்திலும், கடுமையான வெயில் நிலவும் காலத்திலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. திமுக அரசிற்கு மக்களின் பலம் தேவையில்லை. கூட்டணி கட்சிகளின் பலம் போதுமானது என நினைக்கிறது. முதலமைச்சர் கொடைக்கானலில் கூலாக இருந்து விட்டு வரட்டும், முதலமைச்சர் குடும்பத்துடன் மேற்கொண்டுள்ள பயணச் குறித்து விமர்சனம் செய்ய மாட்டோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பயணம் குறித்து கலைஞர் விமர்சனம் செய்தார். அத்தகைய முறையில் நாங்கள் முதலமைச்சர் பயணம் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. போதைப் பொருள் நடமாட்ட விவாகரத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக காவல்துறையினர் போதை பொருள் விவகாரத்தில் கண்டும், காணாதுமாக உள்ளனர். போதைப் பொருள் நடமாட்ட விவகாரத்தில் உளவுத்துறை நுண்ணறிவுத்துறை செயலிழந்து விட்டது. போதை பொருள் நடமாட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியளவில் போதைப்பொருள் பயன்பாட்டு தளமாக குஜராத்தும் தமிழக அளவில் தமிழ்நாடும் விளங்குகிறது. போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.