உடலுக்கு நன்மை தரும் கள்ளுக்கடையை ஏன் தமிழ்நாட்டில் திறக்க மாட்டேங்குறீங்க: சீமான்

கள் என்பது எங்கள் உணவு. ஒளவையும், அதியமானும் கள் குடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சங்க இலக்கிய பாடல்களிலேயே உள்ளது. உடலுக்கு நன்மை தரும் மூலிகை பானமான கள்ளுக்கடையை ஏன் தமிழ்நாட்டில் திறக்க மாட்டேங்குறீங்க என்று சீமான் கேள்வியெழுப்பினார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 59-ஐ எட்டியுள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

கள்ளுக்கடையை திறக்க வலிக்குது.. கள்ளச்சாராயம் மட்டும் காய்ச்சு வித்திட்டிருப்பியா நீ? தமிழ்நாட்டுல எதுக்கு கள்ளுக்கடையை திறக்க மாட்ற. கள்ளு குடிச்சு செத்தவன் ஒருத்தனை காட்டு எனக்கு. அப்படி காட்டிட்டா, அரசியலை விட்டே போயிடுறேன். உணவின் ஒரு பகுதி கள்ளு என்று அரசியலமைப்பே சொல்லது. சங்க இலக்கியங்களிலேயே இதற்கு குறிப்பு இருக்கு. அதியமானும், ஒளவையாரும் கள்ளு குடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்கனு பாடலே இருக்கு. கள் உண்பது தமிழன் கலாச்சாரம்.

தென்னம் பாலும், பனம் பாலும் எங்கள் மூலிகை பானம். அதை நீ திறக்க மாட்ற. கேரளாவில் கள் இருக்கு. புதுச்சேரியில் கள் இருக்கு. கர்நாடகாவில் கள் இருக்கு. ஏன் தமிழ்நாட்டுல மட்டும் கள்ளுக்கடை இல்ல. ஏனென்றால் இங்கே ரெண்டு கட்சிக்காரர்களும் மதுபான தொழிற்சாலை நடத்திட்டு இருக்கான். கள்ளுக்கடை திறந்துவிட்டால் அவனோட தொழில் படுத்துரும்ல. அதனால்தான் திறக்க மாட்றான். இவ்வாறு சீமான் பேசினார்.