மாஞ்சோலை விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை வேண்டும்: திருமாவளவன்!

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மாஞ்சோலை தேயிலை தோட்டம் மற்றும் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர தொல் திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரை ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் பேசி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி கூறியதாவது:-

இன்றைக்கு மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு உரிமையை உறுதி செய்ய வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த மக்கள் நான்கு தலைமுறைகளாக அங்கு பணியாற்றி வருகிறார்கள். வெள்ளையர் காலத்தில் அரை அடிமை என்ற நிலையில் தான் இருந்தது.
வெள்ளையர் காலத்தில் இருந்த முறை தற்போதும் தொடர்கிறது. 2028ஆம் ஆண்டு தான் ஒப்பந்தம் முடிவடைகிறது. நான்கு ஆண்டுகள் இருக்கும் போது அந்த நிறுவனம் அங்கு உள்ள மக்களை வெளியேற்றி வருகிறார்கள். தானே பணி ஓய்வு பெறுகிறோம் என்ற வகையில் அவர்களிடம் கடிதம் பெறப்பட்டது.

2 இலட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்து வெளியேற்றுகிறார்கள். அங்கு 600 குடும்பங்கள் உள்ளது. 5ஆம் வகுப்பு வரை மட்டுமே அங்கு உள்ளது. மேற்படிப்பிற்காக அவர்கள் கீழே இறங்கி தான் வர வேண்டி உள்ளது. அந்த நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு பேசி உரிய நிவாரணம் வாங்கி தர வேண்டும். மாஞ்சோலை தோட்டம் லாபகரமான தேயிலை மக்களுக்கு 1 ஏக்கர் நிலம் சமவெளியில் தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசே மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த அனைவரும் சேர்ந்து வலியுறுத்துவோம். அந்த நிறுவனம் வெளியேறுவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் அந்த மாஞ்சோலை தோட்டத்தை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும். நான்கு தலைமுறைகளாக செம்மைப்படுத்திய தொழிலாளர்களை விரட்டி அடிப்பது மாபெரும் சுரண்டல் ஆகும்.

ஒப்பந்த நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த தொழிலாளர்களும் உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் நிறுவனத்திடம் தமிழக அரசு பேச வேண்டும். உலகப் புகழ்பெற்ற தேயிலை உற்பத்தி மக்கள் சிந்திய இரத்தம் இன்னும் காயாமல் தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும். தலா அரை ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் செய்ய வேண்டும். அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் உரிய அழுத்தம் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.