நடிகர் விஜய் அரசியலில் ஜொலிக்க இதை செய்யனும்: கனிமொழி எம்பி!

திமுக எம்பி கனிமொழி நடிகர் விஜய் சினிமாவை போல் அரசியலிலும் ஜொலிக்க இதை செய்தால் போதும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், படத்தில் நடித்துக்கொண்டே கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தற்போது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். முதலில் உறுப்பினர்கள் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் என தமிழக வெற்றிக் கழகத்தை பலப்படுத்தி வருகிறார். தற்போது கட்சியின் கொள்கைகள், கொடி போன்றவற்றை அறிமுகப்படுத்த மாநில அளவில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக திருச்சியில் இடங்களை தேர்வு செய்து வருகிறார்.

இதற்கிடையே திமுக எம்பி கனிமொழி நடிகர் விஜய் சினிமாவை போல் அரசியலிலும் ஜொலிக்க இதை செய்தால் போதும் என்று ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக எம்பி கனிமொழியிடம், அரசியலில் விஜய் ஜொலிப்பாரா? விஜய் அரசியலில் வெற்றி பெற என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி எம்பி கூறியதாவது:-

விஜய் சின்ன வயதில் இருக்கும் போதே அவருடடைய குடும்பத்துடன் எங்களுக்கு நட்புறவு இருக்கிறது. இப்போது விஜய் பலரும் கொண்டாடக்கூடிய வகையில் வளர்ந்து இருக்கிறார். தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கான உழைப்பு, அதற்கான பாதையை அவர் தெளிவாக அமைத்து அதற்கான முயற்சிகளை செய்ததால் தான் இந்த உயரத்தை அடைய முடிந்தது. எனவே இதே தெளிவான உழைப்போடு, தெளிவான பாதையோடு பயணித்தால் சினிமாவை போல் அரசியலிலும் விஜய் ஜொலிப்பார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.