சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் நடந்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி கண்டனத்துக்கு உரியது. மாற்றுத்திறனாளியை கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாற்று திறனாளி நபர்களை மனித நேயத்துடன் பார்க்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் கல்லூரி விருந்தினர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் நடந்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி கண்டனத்துக்கு உரியது. அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்து அரசு பள்ளியில் எப்படி அனுமதித்தர்கள் என்று தெரியவில்லை. மாற்றுத்திறனாளியை கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாற்று திறனாளி நபர்களை மனித நேயத்துடன் பார்க்க வேண்டும்.
திமுக ஆட்சியில் தொடர் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பது போல் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரிக்கு சென்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணை அலைக்கழித்துள்ளனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் புகார்கள் காவல் நிலையத்தில் ஏற்காமல் உள்ளனர். திருச்சி பள்ளி தலைமையாசிரியர் மகன் மருத்துவராக உள்ளார். அந்த பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை என்ற பெயரில் பாலிய கொடுமைக்கு அளிக்கப்பட்டுள்ளனர். பள்ளி குழந்தைகள் என்றும் பார்க்காமல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறைக்கு சுதந்திரம் வழங்காததால் பல சம்பவங்கள் நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி சுவர் பூட்டில் மனிதமலம் பூசப்பட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது. வேங்கை வயல் சம்பவத்தில் இன்றளவும் உண்மையை கண்டறியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 22 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்காமல் உள்ளது. உடனடியாக மத்திய மாநில அரசு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து படகுகளை விடுவிக்க வேண்டும்.. காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. பயமில்லாமல் குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர். மக்களை பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.மக்களுக்கும் பாதுகாப்பும் இல்லை. ஆவின் நிறுவனத்தில் முறைகேடு என வீடியோ வெளியிட்ட நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது கண்டனத்துக்கு உரியது.
முதல்வர் துபாய் ஜப்பான் சிங்கப்பூர் ஸ்பெயின் சென்று என்ன முதலீடு வந்தது என தெரியவில்லை, வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்த முதலீடுகள் என்ன என வெள்ளையறிக்கை கேட்டோம் முதல்வர் முடியாது என்றார், வெள்ளையறிக்கை விட்டால் தான் முதலீடுகள் என்ன என தெரியும். அரசு பணத்தை முதல்வர் வெளிநாடு சென்று வீணடிக்கிறார். வெளிநாட்டுக்கு முதல்வர் இன்பசுற்றுலா சென்றுள்ளார். ரோம் நகரம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசிக்கிறார் என்ற வாசகத்தை போல் இப்போது தமிழக முதல்வர் தமிழகம் பாதிப்பில் இருக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளார். முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் சிகிச்சை எடுக்க முதல்வர் வெளிநாடு சென்றிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. உடல்நிலை சரியில்லை என்றால் வெளிப்படையாக சொல்லி சென்றிருக்கலாம். அவருக்கு உடல் நிலை சரியில்லையா என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் எதுவும் முறையாக செயல்படுத்தவில்லை. ஏற்கனவே இயங்கும் தொழிற்சாலைகளுக்கு தான் மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதனை இங்கையே முதல்வர் செய்திருக்கலாம். அமைச்சர் டி.ஆர் பி ராஜா அன்றைய தினம் டிவிட்டரில் வெளியிட்ட செய்தி இன்றைய தினம் அவர்களுக்கே பொருந்தும். சென்னையில் கார் பந்தயம் நடத்தி மக்கள் பணம் வீனடிக்கபடுகிறது. அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படவில்லை. ரேசன்கடைகளில் தரமான பொருட்கள் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலைமை இருக்கும்போது விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக கஜானாவை காலி செய்து வருகிறார். 40 மாத கால ஆட்சியில் திமுக 3½ லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.
அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என நயினார் கருத்துக்கு அவர் விரும்பினால் மட்டும் என்ன செய்வது. அதிமுக தலைமையை விமர்சிப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதிகாரத்துக்கு நாங்கள் அடிமையாக இருந்ததில்லை. எங்களுக்கு என மரியாதை தனி தத்துவம் உள்ளது. தலைவரைப் பற்றி அவதூராக பேசுகிறார்கள். அண்ணாவை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெற்றி தோல்வி என்பது வேறு தன்மானம் முக்கியம். அதிமுக ஆட்சி முறையாக தான் நடைபெற்றது. இத்தனை நாட்கள் எதுவும் செய்யாமல் இப்போது மீதம் இருக்கும் 19 மாத ஆட்சி காலத்தில் எங்களை குறை சொல்கிறார்கள். முதல்வர் டிரீட் மண்ட் முடிந்து வந்து ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான கால்நடை பூங்காவை முதலில் திறக்கட்டும். கட்டாத ஏய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசும் அரசு விவசாயிகளின் நலனுக்காக ₹1000 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கால் நடை பூங்காவை முதல்வர் திறக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.